மோசமான வாழ்க்கைமுறை மாற்றம், மோசமான உணவுமுறை காரணமாக தலைமுடி ஆரோக்கியம் கூட மோசமான நிலைக்குச் சென்றுவிடுகிறது. தலைமுடி ஆரோக்கியத்தை மீட்டெடுக்க கறுவேப்பிலை பல வழிகளில் உதவுகிறது. அரை கப் கறுவேப்பிலையை எடுத்துக்கொண்டு அதில் வெந்தயக்கீரை இலையையும், ஒரு நெல்லிக்காயையும் வைத்து பேஸ்ட்டாக அரைக்க வேண்டும். அதை தலையில் தேய்த்து அரைமணி நேரத்தில் வெந்நீரில் தலைமுடியை அலசினால் நல்ல பயன் தரும். அதேபோல், தயிர் மற்றும் கறுவேப்பிலை பேஸ்ட் செய்து தலையில் தேய்க்கலாம்.