ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளில்
அமித்ஷா பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை அவர் கலந்து கொள்ள இருந்த பிரச்சார கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.