சென்னை ஐ.ஐ.டி.க்கு முன்னாள் மாணவர் கிருஷ்ணா சிவுகுலா ரூ.228 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். 1970ம் ஆண்டு ஏரோனாடிக்ஸ் பாடப்பிரிவில் எம்.டெக் படித்த கிருஷ்ணா சிவுகுலா, ஆண்டிற்கு சுமார் 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டக்கூடிய 2 தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார். ரூ.228 கோடி நன்கொடை வழங்கியதன் மூலம் சென்னை ஐஐடி வரலாற்றில் அதிக நன்கொடை வழங்கியவர் என்ற பெருமையை கிருஷ்ணா சிவுகுலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.