சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. ஒரு வருட காலத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படலாம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சூசகமாக தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, "கூட்டணிக்காக தேமுதிக பட்ஜெட்டை வரவேற்கவில்லை. தேமுதிகவின் 2006 தேர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்ட திட்டங்கள் தமிழக பட்ஜெட்டில் இருந்ததால் வரவேற்கிறோம். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து தெரிவிப்போம்" என்று பேட்டியளித்துள்ளார்.