தமிழகம் முழுவதும் அன்னதானம் - தவெக தலைவர் முடிவு

14914பார்த்தது
தமிழகம் முழுவதும் அன்னதானம் - தவெக தலைவர் முடிவு
உலக பட்டினி தினமான மே 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மேலும், பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி