மருத்துவமனையில் தீ விபத்து - 7 குழந்தைகள் பலி

12891பார்த்தது
டெல்லி விவேக் விஹார் பகுதியில் இயங்கி வந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று (மே 25) நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவமனையில் இருந்த 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில் 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி