விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் அஜித்

67பார்த்தது
விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் அஜித்
நடிகர் விஜய், இன்று (ஜூன் 22) தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘தி கோட்’ படத்தின் “சின்ன சின்ன கண்கள் சிரிக்கின்றதோ” எனும் பாடல் வெளியானது. அதே நேரம் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதாக அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் ஆரவ் வெளியிட்டுள்ளார். மேலும், அஜித் கார் ரேஸில் ஈடுபடும் புகைப்படங்களும் வைரலாகும் நிலையில் விஜய் பிறந்தநாளில் அஜித் டிரண்டிங்கில் இருந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி