நாதக வேட்பாளர், பரப்புரை வாகனம் மீது அதிமுகவினர் தாக்குதல்

34186பார்த்தது
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் உள்ள காரிமங்கலம் பகுதியில் அதிமுகவினர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா மீதும் பரப்புரை வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய அதிமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் குடித்து விட்டு அடி ஆட்களை ஏவி அராஜகம் செய்யவிட்டதாக குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி