நாளை மாலை 6 மணிக்கு மேல்.. முக்கிய அறிவிப்பு

78பார்த்தது
நாளை மாலை 6 மணிக்கு மேல்.. முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக் கூட்டத்தையும் நாளை 6 மணிக்கு பிறகு நடத்தப்படக்கூடாது. செய்தி தாள், சமூக வலைத்தளங்கள், டிவி உள்ளிட்ட எந்த வித ஊடகத்தின் மூலமும் தேர்தல் சம்மந்தமான எதுவும் பதிவிடக்கூடாது. இதை கண்காணிக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதனை மீறினால் 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி