இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது உடல் நலக்கோளாறுகளை மட்டும் ஏற்படுத்துவதில்லை. மனநலக்கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. மதுவுக்கு அடிமையானவர்கள் சிந்திக்கும் திறனை மெல்ல மெல்ல இழப்பார்கள். அதிகமாக மது அருந்துவது மனச்சோர்வு, ஞாபகமறதி, தற்கொலை எண்ணங்களை உண்டாகும், மூளைச் சிதைவு ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.