தமிழில் அறிமுகமாகிறார் நடிகை ஸ்ரீலீலா

56பார்த்தது
தமிழில் அறிமுகமாகிறார் நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இளம் நடிகையான இவர் தெலுங்கில் தற்போது படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இவரது நடன அசைவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘குர்ச்சி மாடதபெட்டி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார். இந்நிலையில், சில தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என ஸ்ரீ லீலா கூறியுள்ளார்.