இளநரை பிரச்சனையை சரி செய்ய நடிகை ரேகா தீர்வு ஒன்றை கூறியுள்ளார். ஒரு பாட்டிலில் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் சேர்த்து நெல்லிக்காய் பொடி, வெந்தயப் பொடி, கருஞ்சீரகப்பொடி, வேப்பிலை பொடி ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இதை வெயில்படாத இடத்தில் ஒரு வாரத்திற்கு அப்படியே வைத்து, பின்னர் இந்த எண்ணெயை மிதமான சூடு செய்து தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யலாம் என கூறுகிறார். இந்த முறையை தானும் பின்பற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.