மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நடிகர் சூரியன் அம்மன் உணவகத்தை மூடக்கோரி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 360 சதுர அடி திறந்தவெளியை உணவக நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக, புகாரளித்துள்ள முத்துக்குமார், உணவகத்திற்கு சீல் வைக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, காழ்ப்புணர்ச்சி காரணமாக தனி நபர் தூண்டுதலின் பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக உணவகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.