அஜர்பைஜானில் நடைபெற்ற ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு நடிகர் அஜித் குமார் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அஜித்தை ரசிகர்கள் கண்டவுடன் ஆர்ப்பரித்தனர். சிறிது நாட்கள் ஓய்வுக்கு பின், மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. சமீபத்தில், விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஆனால் அந்தப் படத்தின் போஸ்டர், மிக சாதாரணமாக இருப்பதாக சினிமா ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.