இலங்கையின் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில், நடப்பாண்டில் 554 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் கடற்பரப்பிற்குள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. கடல் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இலங்கை மீனவர்களின் கடல் தொழில் சார்ந்த பிரச்சனைகள், குறைபாடுகளை தீர்ப்பதற்கும் கடற்படை அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என தெரிவித்துள்ளது.