பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,08,105 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6 கோடியே 41 லட்சத்து 18,000 “சாதனை ஊக்கத் தொகை”வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.85 வீதமும், 151 நாட்களுக்கு மேல், 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 வீதமும், 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வீதமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.