சேஷேய் வடிவிலான சிறிய வகை பாக்கெட்டுகளில் ஆவின் நெய் விற்பனை செய்யப்பட உள்ளது என பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் அளித்துள்ளார். மேலும் அவர், "தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆவின் பொருட்களைக் கூடுதலாக விற்பனை செய்வதற்கும் அவற்றைச் சலுகை விலையில் வழங்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. விபத்துகளைத் தடுக்கும் வகையில், ஆவின் பொருட்களைத் தயாரிக்கத் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.