திண்டுக்கல்: நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத கார்த்திகை பூஜை விழா நேற்று (ஜுலை 29) நடைபெற்றது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.