உயிரை பறித்த காட்டு யானை.. அதிர்ச்சி வீடியோ

75389பார்த்தது
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று குடியிருப்புக்குள் வந்து டிராக்டர் டிரைவர் அஜி என்பவரை துரத்தியுள்ளது. உயிருக்கு பயந்த அவர் ஒரு வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றார். அவரை விடாமல் துரத்திய யானை பின்னால் வந்து வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே சென்றது. இறுதியாக, யானை அந்த நபரை காலால் மிதித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜியை யானை துரத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி