வடக்கு சுமத்ராவின் கோலாங் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவரது வீட்டின் கூரையில் கல் ஒன்று விழுந்து தரையை பிளந்து 15 செ.மீ ஆழம் சென்றுள்ளது. இது விண்வெளியில் இருந்து வந்த கல் என்பதை உறுதி செய்த அவர், ஆய்வுக்கு அனுப்பினார். இந்த கல் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்தது. மிக அரிதான இந்த கல்லை அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 கோடி கொடுத்து வாங்கி உள்ளார். இதனால் ஒரே இரவில் ஜோஸ்வா கோடீஸ்வரராக மாறினார்.