திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைப்பயிற்சி சென்ற ரியல் எஸ்டேட் அதிபர் தமிழ்ச்செல்வனை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த தமிழ்ச்செல்வனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆள்நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த கொலை முயற்சி நடந்திருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.