ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணி செய்து சாதனை

71பார்த்தது
ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணி செய்து சாதனை
தற்போது பணம் மற்றும் தொழில் வாய்ப்பு என்ற பெயரில் ஊழியர்கள் பல நிறுவனங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். ஆனால் பிரேசிலைச் சேர்ந்த வால்டர் எர்த்மேன் (101) என்பவர் ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜனவரி 17, 1938-ல் இண்டஸ்ட்ரீஸ் ரெனாக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அதே நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார். இவர் சமீபத்தில் தனது 101வது பிறந்தநாளை கொண்டாடினார்.

தொடர்புடைய செய்தி