நியூசிலாந்து விஞ்ஞானிகள் பசிபிக் கடலில் ஆழமான பகுதியில் வாழும் அரிய வகை பேய் சுறா வகையை கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை மீன்கள் கடலுக்கு அடியில் அதாவது 2,600 மீட்டர் வரை கீழே வாழ்கின்றன. ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும் பொழுது, “பேய் சுறாக்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவற்றில் எத்தனை வகைகள் உள்ளன என்பது இன்னும் அறியப்படவில்லை. இந்த உயிரினங்களை பற்றி அறிந்து கொள்வது இவைகளை பாதுகாப்பதற்கு உதவும்” என கூறினார்.