வேலையில்லாத இளைஞர்களுக்காக உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் அமைக்க மானியத்துடன் கடனுதவிகளை மத்திய அரசு வழங்கிவருகிறது. இத்திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இந்தக் கடனுக்கு அரசிடமிருந்து 35% மானியம் கிடைக்கும். அதாவது ரூ.3.15 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும். பயனாளிகள் ரூ.6.85 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற https://pmfme.mofpi.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.