சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுமி கழுத்து இறுக்கி பலி

50பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் அரமண்டாகுப்பம் கிராமத்தை சேர்ந்த வேலு ஜெயந்தி தம்பதிக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளன. இதில் இளைய மகளான ரூபிகா நேற்று (செப் 24) பள்ளிக்கு சென்று வந்த நிலையில், அவர்களது வீட்டு கொட்டகையில் சேலையால் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கழுத்து இறுக்கி மயங்கியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரூபிகா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: ஜீ நியூஸ்

தொடர்புடைய செய்தி