வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய தந்தை

47695பார்த்தது
வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய தந்தை
பஞ்சாப் மாநிலம் டெஹ்லான் அடுத்த முகந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால், அந்தப் பெண் மற்றொரு நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணிற்கு 20 வயது மகள் உள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20 வயதுடைய பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, தனது தாயின் இரண்டாவது கணவரான 50 வயதுடைய அந்த நபர், தனது மகள் முறையான (வளர்ப்ப மகள்) இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தாயிடம் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். இதுகுறித்து தனது தாய்மாமாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசில் புகார் அளித்த நிலையில், ஐபிசி 376 சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி