பேண்டேஜால் புற்றுநோய் வருமா? பகீர் தகவல்

52பார்த்தது
பேண்டேஜால் புற்றுநோய் வருமா? பகீர் தகவல்
ரத்த காயம் ஏற்படும் போது, அந்த இடத்தில் போடப்படும் பேண்டேஜால் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Mamavation என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், 40 விதமான பேண்டேஜ்கள், 18 பிராண்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் சுமார் 26 பேண்டேஜ்களில் 11 பிபிஎம் முதல் 239 பிபிஎம் வரை ஆர்கான் ஃப்ளூரின் அளவுகள் இருப்பதாகவும், இவற்றை காயங்களில் வைப்பதன் மூலம், ரசாயனங்கள் ரத்த ஓட்டத்தில் சென்று, புற்றுநோய் போன்ற உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் விளைவுகளை ஏற்படுத்துவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி