நள்ளிரவில் வீடு புகுந்து மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்

70பார்த்தது
நள்ளிரவில் வீடு புகுந்து  மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் மே 20ம் தேதி நள்ளிரவு, லால்சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 34 வயது ஊனமுற்ற பெண் ஒருவர் போதை ஆசாமி ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். பெண் சத்தம் போடாமல் இருக்க அவரது வாயில் துணியை அடைத்துள்ளார். துணியை கழற்றிவிட்டு அந்தப் பெண் அலறியதும், அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து இளைஞரை பிடித்தனர். பின்னர் அவரை அரை நிர்வாணமாக்கி, தூணில் கட்டி வைத்து அடித்துள்ளனர். அவர் தலை முடியையும் வெட்டியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரை மீட்டு சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி