ரயில் நிலையத்தில் கவர்ச்சி நடனம் - 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு

84பார்த்தது
ரயில் நிலையத்தில் கவர்ச்சி நடனம் - 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு
திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்ட 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் இன்று (மே 21) வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலைய படிக்கட்டு, சரக்கு ரயில் நிற்கும் நடைபாதையில் நடனமாடி வீடியோ எடுத்ததாக வழக்குப்பதிந்துள்ளதாகவும், இனி இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என பெண்களை ரயில்வே போலீசார் கண்டித்து அனுப்பி வைத்தனர்.

இவர்கள், உடலை கவ்விப்பிடிக்கும் ஜீன்ஸ், பனியன் உடை அணிந்து உடலை வளைத்து நெளித்து, ‘மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே’ என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க கவர்ச்சிகரமாக ஆடி ரீல்ஸ் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி