ஆட்டோ, பைக் மோதி விபத்து.. இளைஞர் பலி (வீடியோ)

79பார்த்தது
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், பந்த்வாலா தாலுகா, பானேமங்களூரில் திங்கள்கிழமை திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. சாலையில் ஆட்டோ ரிக்‌ஷாவும், பைக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஆட்டோவில் பயணம் செய்த 19 வயது முகமது அல்தாப் கீழே விழுந்தார். இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அல்தாப்பை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அல்தாப் உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி