ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தன்னை கடத்திய தனுஜ் என்பவரை பிரிய மனமில்லாமல் 2 வயது குழந்தை கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக தன்னுடைய உறவினரின் குழந்தையை தனுஜ் கடத்தியுள்ளார். 14 மாதங்களாக குழந்தை தனுஜுடன் வளர்ந்த நிலையில், போலீசார் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது குழந்தை தாயுடன் செல்ல மறுத்து அடம்பிடித்துள்ளது. பின் குற்றவாளி தனுஜும் அழ, போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்