தாறுமாறாக ஓடிய கார்: ரூ.12,500 அபராதம் விதித்த காவல்துறை

85பார்த்தது
டெல்லியில் தாறுமாறாக கார் ஓட்டியவருக்கு மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு இளைஞர் ஒருவர் சாலைகளில் அதிவேகமாக கார் இயக்கிக் கொண்டு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த டிவைடர்களில் மோதிவிட்டு நிற்காமல் சென்றார். அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்த காவல்துறை, ரூ.12,500 அபராதம் விதித்துள்ளனர். இந்த வீடியோவை டெல்லி போக்குவரத்து காவல்துறை தங்களது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி