தொடர் விடுமுறை.. சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

81பார்த்தது
தொடர் விடுமுறை.. சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் வார விடுமுறை வர இருப்பதால் தமிழகம் முழுவதும் கூடுதலாக சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கபட உள்ளது. அதன்படி சென்னையிலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 10) 315 பேருந்துகளும், 12 ஆம் தேதி 290 பேருந்துகளும், 13ஆம் தேதி 340 பேருந்துகளும் இயக்கப்படும். அதேபோல் பெங்களூரு, வேளாங்கன்னி உள்ளிட்ட இடங்களுக்கு 3 தினங்களுக்கு தலா 40 பேருந்துகள் என 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி