கிளாசிக் படங்களின் தயாரிப்பாளர் காலமானார்

79பார்த்தது
கிளாசிக் படங்களின் தயாரிப்பாளர் காலமானார்
பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் காந்திமதி பாலன் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சவடிபாலம், சுகமோ தேவி, பத்தமுதயம், மூனாம் பக்கம், ஆதாமின் வாரியெல்லு உள்ளிட்ட பல கிளாசிக் ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார். காந்திமதியின் கடைசி படம் 1990-ல் வெளியான 'இ தனுத்த வெளுப்பான் காலத்து' என்ற படமாகும். மம்முட்டி, மோகன்லாலை வைத்து அதிக படங்களை தயாரித்துள்ளார்.

திரைப்பட அகாடமியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர். 63 வயதில், அவர் அலிபி குளோபல் கம்பெனி என்ற சைபர் ஃபோரன்சிக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிறுவினார். நாட்டின் பெரும்பாலான குற்றவியல் புலனாய்வு அமைப்புகளுக்கான இணைய புலனாய்வு சேவை வழங்குநராக அதை நிர்வகித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி