விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா நேற்று அய்யனார் நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கு தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், “பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் செய்யாத தலைவராக ஆட்சி செய்து வருகிறார். மூன்றாவது முறையும் அவர் தான் பிரதமராக வர இருக்கிறார்” என்றார்.