Bear Grylls-ன் வீடியோ மூலம் உயிர் பிழைத்த இளைஞர்கள்!

83பார்த்தது
Bear Grylls-ன் வீடியோ மூலம் உயிர் பிழைத்த இளைஞர்கள்!
இந்தோனேசியாவில் இரு இளைஞர்கள் Bear Grylls-ன் வீடியோ மூலம் உயிர் பிழைத்துள்ள சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாலி தீவில் எரிமலையின் மீது ஏறிய மேத்யூ (22), ஆண்ட்ரூ (18) என்ற இரு இளைஞர்கள் வழி மறந்து தவித்துள்ளனர். இதையடுத்து, அந்த இரு இளைஞர்கள் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் Bear Grylls-ன் நிகழ்ச்சியில் பார்த்தது போல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் பிழைத்து வாழ்ந்துள்ளனர். பின்பு மீட்பு குழுவினரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி