கள்ளக்காதலனுடன் வாழ குழந்தைகளைக் கொன்ற பெண் கைது

37711பார்த்தது
கள்ளக்காதலனுடன் வாழ குழந்தைகளைக் கொன்ற பெண் கைது
காதலனுடன் வாழ்வதற்காக குழந்தைகளை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடந்த மார்ச் 31ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் ராய்காட்டில் நாட்டையே உலுக்கிய கொடூரம் நடந்தது. பெண் ஒருவர் தனது 5 வயது மகளையும், மூன்று வயது மகனையும் கழுத்தை நெரித்துக் கொன்றார். குற்றம் சாட்டப்பட்ட இருபத்தைந்து வயதான ஷீத்தல் பால், பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கணவனை விட்டு பிரிந்து காதலனுடன் செல்ல அந்த பெண் முடிவு செய்திருந்தார். ஆனால் குழந்தைகள் இடையூறாக இருந்ததால் கொலை செய்துள்ளார். அப்பெண்ணிடமும், அவரது காதலனிடமும் விசாரணை நடந்துவருகிறது.