இளைஞர் மீது மோதிய கார் - பதைபதைக்கும் வீடியோ

112733பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரமான சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. சாலையின் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த 3 இளைஞர்கள் மீது அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று மோதியது. இந்த கோர விபத்தில் 3 இளைஞர்களும் பல அடி தூரங்களுக்கு தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி