ட்ரை சைக்கிள் மீது மோதிய கார் - சிறுவன் உள்பட மூவர் பலி

59பார்த்தது
ட்ரை சைக்கிள் மீது மோதிய கார் - சிறுவன் உள்பட மூவர் பலி
ராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த தங்கம்மா (35), மாரியம்மாள் (66), சதீஷ் (7), சிலம்பரசன் ஆகிய நான்கு பேரும், ட்ரை சைக்கிள் மூலமாக பழைய பேப்பர், பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று (மே 26) அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ட்ரை சைக்கிளில் இருந்த தங்கம்மா, மாரியம்மாள், 7 வயது சிறுவன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி