இந்தியாவின் உச்ச உணவு ஒழுங்குமுறை ஆணையமான, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும், அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறும் மாநில உரிம அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. தாய்ப்பாலை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவது விதி மீறலாகும். FSSAI, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 மற்றும் அதன் தொடர்புடைய விதிமுறைகளின் கீழ் எந்தவொரு மீறலும் தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.