வறுமையின் பிடியில் இருந்து நாடகத்துறைக்கு வந்த மனோரமா

79பார்த்தது
வறுமையின் பிடியில் இருந்து நாடகத்துறைக்கு வந்த மனோரமா
சிறுவயதில் வறுமையின் பிடியில் இருந்த மனோரமா தனது தாயார் நடத்தி வந்த பலகார கடையில் இருந்த பலகாரங்களை வீதி வீதியாக நாடக கம்பெனிகள், தியேட்டர்களில் விற்று வருவார். அப்போது தியேட்டருக்கு வெளியே நின்று கொண்டு நாடகங்களை கவனித்து வந்த அவருக்கு, நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தனது 12வது வயதில் ‘வைரம் நாடக சபா’ என்ற நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்தார். பின்னர் எஸ்.எஸ் ராஜேந்திரனின் ‘எஸ்.எஸ்.ஆர்’ நாடக மன்றத்தில் இணைந்தார். இந்த மன்றம் மூலமாக நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.

தொடர்புடைய செய்தி