பெண்களுக்கு உயர்வு தரும் அட்டகாசமான திட்டம்

284525பார்த்தது
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. இதில், பெண்களுக்கான புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பெண்கள் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், (Mahila Samman Saving Certificate) இரண்டு வருட காலத்திற்குக் கிடைக்கும் இந்தத் திட்டமானது, டெபாசிட்களுக்கு 7.5 சதவீத நிலையான வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். 2 வருடம் முடிந்தவுடன் அதற்கான வட்டியுடன் பெண்கள் பணத்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.