கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் மாநில அரசு டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா கிரேநேர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் கரியப்பா என்பவரது மகள் பூர்ணிமா (5), டெங்கு பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.