கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சாத்விக் முஜகொண்டா என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். 16 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சிறுவனுக்கு குழாய்கள் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.