"ஒரு பெண்ணுக்கு 900 ரூபாய் மிச்சமாகிறது"

139417பார்த்தது
"ஒரு பெண்ணுக்கு 900 ரூபாய் மிச்சமாகிறது"
பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்தின் கீழ், 440 கோடி ரூபாய் இலவச பயணங்கள் தற்போதுவரை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் இடைநில்லா பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கான விடியல் திட்டத்தின் கீழ் தற்போது வரை 440 கோடி ரூபாய் இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் மாநில திட்டகுழு ஆய்வு அறிக்கையின்படி சராசரியாக "ஒரு பெண்ணுக்கு 900 ரூபாய் மிச்சமாகிறது" எனவும் தெரிவித்துள்ளார்.