பைக் மேல் படமெடுத்து ஆடிய பாம்பு: வைரல் வீடியோ

82பார்த்தது
உத்தர பிரதேசம் அமேதியில் காந்தி நகர் சாட்டோ சாலையில் உள்ள ரயில்வே கிராசிங்கில் பைக் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அப்போது இருட்டில் பாம்பு ஒன்று பைக்கில் ஏறியது. பைக்கின் உரிமையாளர் பைக்கை எடுக்க வந்த போது பாம்பு இருந்ததை பார்த்து அலறி ஓடினார். வாகனத்தை விட்டு விலகாமல் பாம்பு படம் எடுத்து ஆடத் தொடங்கியது. பின்னர் சிலர் தைரியமாக பாம்பை அப்புறப்படுத்தினர். உடனடியாக பைக் ஓட்டுநர் தனது வாகனத்துடன் அந்த இடத்தை காலி செய்து ஓடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி