துப்பாக்கிச் சூட்டில் 8 மாவோயிஸ்ட்டுகள் பலி

65பார்த்தது
துப்பாக்கிச் சூட்டில் 8 மாவோயிஸ்ட்டுகள் பலி
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிரடி துப்பாக்கிச் சூடு நடந்தது. கங்களூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோர்ச்சோலி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். பின்னர், அங்கிருந்து எல்எம்ஜி தானியங்கி ஆயுதம், பிஜிஎல் லாஞ்சர் மற்றும் பிற ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். தற்போது அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.