பெங்களூரு ரோடு ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா

63பார்த்தது
பெங்களூரு ரோடு ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்ரல் 2) மாலை பெங்களூருவில் உள்ள ஊரக தொகுதிக்குட்பட்ட சன்னப்பட்டிணத்தில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். ஒன்றரை கிலோ மீட்டர் வரை இருக்கும் இந்த ரோடு ஷோவில் அமித்ஷாவுடன் ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமியும் பங்கேற்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த ஊரக தொகுதியில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதனால், இந்த முறை கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்பதால் கிராமப்புறங்களில் இருந்து தனது பிரச்சாரத்தை அமித்ஷா தொடங்குவதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி