பட்ஜெட்டில் ஜிப்மருக்கு 50 கோடி நிதி குறைப்பு: ரவிக்குமார் எம்.பி., கண்டனம்

68பார்த்தது
பட்ஜெட்டில் ஜிப்மருக்கு 50 கோடி நிதி குறைப்பு: ரவிக்குமார் எம்.பி., கண்டனம்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட 50 கோடி குறைவாக ஒதுக்கிய மத்திய அரசுக்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பதிவில், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மருக்கு நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. ஜிப்மருக்கு நிதியை உயர்த்தி வழங்க புதுச்சேரி முதலமைச்சர் குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி