ஒரே குடும்பத்திலிருந்து 5 எம்பிக்கள்!

58பார்த்தது
ஒரே குடும்பத்திலிருந்து 5 எம்பிக்கள்!
மக்களவைத் தேர்தல் வாக்கு முடிவுற்ற நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குடும்பத்தில் இருந்து 5 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளனர். கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் 1,70,000 வாக்குகள் வித்தியாசத்திலும், மணிப்பூரி தொகுதியில் போட்டியிட்ட அவரது மனைவி டிம்பிள் யாதவ் 2,21,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், அகிலேஷின் உறவினர்களான அக்ஷய் யாதவ் பிரோசாபாத் தொகுதியிலும், தர்மேந்திர யாதவ் ஆசாம்கர் தொகுதியிலும், ஆதித்யா யாதவ் பதவுன் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற எம்.பியாக செல்ல உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

தொடர்புடைய செய்தி